சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் திருக்கோயில் 'திருப்புகழ் பாடல் பெற்றுள்ள திருத்தலமாகவும் விளங்குகின்றது' என்பது பலரும் அறிந்திராததொரு இனிய குறிப்பு. அருணகிரிப் பெருமான் இத்தலத்துறையும் கந்தக் கடவுளை 'விநாயகமலை உறை வேலா' என்று போற்றுகின்றார்.
தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
தனதன தானா தனாதன ...... தனதான
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
சததள பாதா நமோநம ...... அபிராம
பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம ...... உமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம ...... அருள்தாராய்
இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூளேற வானவர்
எவர்களும் ஈடேற ஏழ்கடல் ...... முறையோ!என்
மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும்
வசுவெனும் ஆகார ஈசனும் அடிபேண
மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசரர் ஆதாரமாகிய ...... பெருமாளே.
தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
தனதன தானா தனாதன ...... தனதான
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
சததள பாதா நமோநம ...... அபிராம
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
சமதள ஊரா நமோநம ...... ஜகதீச
பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம ...... உமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம ...... அருள்தாராய்
இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூளேற வானவர்
எவர்களும் ஈடேற ஏழ்கடல் ...... முறையோ!என்
றிடர்பட மாமேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர்
இகல்கெட மாவேக நீடயில் ...... விடுவோனே
மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும்
வசுவெனும் ஆகார ஈசனும் அடிபேண
மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசரர் ஆதாரமாகிய ...... பெருமாளே.
No comments:
Post a Comment