வேதவியாசர் 5ஆம் வேதமெனப் போற்றப் பெறும் மாபாரதத்தினை இயற்ற விழைகின்றார். எண்ணிலடங்கா இதிகாச நிகழ்வுகளை மனதிற்குள் புனைந்தவாறே அவற்றினைச் சுவடிகளிலும் பதிவு செய்வதென்பது மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல் என்றுணர்ந்து, விநாயகப் பெருமானின் திருவருளை வேண்டித் தொழுகின்றார்.
அடியவர்க்கு எளியரான விக்னேஸ்வர மூர்த்தி திருக்காட்சி தந்தருள, வியாச ரிஷி 'அடியவன் புனையும் மாபாரதத் திருப்பாடல்களை நீங்களே எழுதித் தந்தருள வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றார். வேழமுகக் கடவுளும் 'வியாசனே! நாம் எழுதும் வேகத்திற்குத் தக்கவாறு நீ பாடல்களைக் கூறுவதாயின் எழுதுவோம்' எனும் நிபந்தனையொன்றினை விதிக்கின்றார். வியாசர் சிறிது திகைத்து, (இடையிடையே சிறிது அவகாசம் பெறும் பொருட்டு) 'பெருமானே! அவ்விதமே கூறி வருவேன், எனினும் பாடல்களின் பொருளுணர்ந்த பின்னரே நீங்கள் எழுதுதல் வேண்டும்' என்று விண்ணப்பிக்க, ஏகதந்த மூர்த்தியும் புன்முறுவலோடு உடன்படுகின்றார்.
இவ்விடத்திலொரு நுட்பம், நம் உயிர்க்குயிராக எழுந்தருளி இருந்து நம்மைத் தொழிற்படுத்துவது இறைவனே, வெளிப்படும் ஞானம் மற்றும் சொற்கள் ஒவ்வொன்றும் இறைவனின் அருட்கொடை. 'மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்' என்பார் நம் அப்பர் சுவாமிகள். 'இறைவன் அறிவித்தாலன்றி அறிய இயலாத தன்மையைக் கொண்டவை ஆன்மாக்கள்'. இவ்விதமிருக்க, பரம்பொருள் வடிவினரான விநாயகப் பெருமானிடத்திலேயே, (கணநேர மாயையினால்) 'பொருளுணர்ந்த பின்னரே எழுதுதல் வேண்டும்' என்று வியாசர் பதில் நிபந்தனை விதிக்கின்றார். கருணைப் பெருவெள்ளமான கணேச மூர்த்தி அக்குற்றத்தையும் குணமாகக் கொண்டு அருள் புரிகின்றார்.
வியாசர் திருப்பாடல்களை விரைவாக மனதிற்குள் புனைந்தவாறே கூறத் துவங்க பிள்ளையாரும் அதனை எழுதி வருகின்றார். நடுநடுவே வியாசர் இருபொருள் தோன்றும் விதமாக ஒரு திருப்பாடலைக் கூறுவார், பிரணவத்திற்கே பொருளாக விளங்கியருளும் நம் விநாயகப் பெருமானும், (வியாசருக்குச் சிறிது அவகாசம் அளித்தருளும் பொருட்டு) அப்பாடலின் பொருளினைச் சிந்திப்பவர் போல் கணநேரம் பாவனை புரிந்து பின்னர் எழுதுவார். அதற்குள்ளாக வியாச ரிஷி அடுத்த 5000 திருப்பாடல்களை மனதினுள் முறைப்படுத்திக் கொள்வார்.
இவ்வகையில் மகா கணபதி எழுதியருளியவை 60 லட்சம் சுலோகங்கள், அவற்றுள் 30 லட்சம் சுலோகங்கள் தேவலோகத்திலும், 15 லட்சம் யட்ச உலகத்திலும், 14 லட்சம் அசுர உலகத்திலும் தங்கி விடுகின்றது, நமக்கின்று கிடைத்திருப்பவை 1 லட்சம் சுலோகங்களே!!
நம் அருணகிரிப் பெருமான் திருச்செந்தூர் திருப்புகழில் இவ்வற்புத நிகழ்வினைப் போற்றுகின்றார்,
-
பாயு மாமத தந்தி முகம்பெறும்
ஆதி பாரதமென்ற பெருங்கதை
பார மேருவிலன்று வரைந்தவன் இளையோனே!!!

No comments:
Post a Comment